1957,நவம்பர்,10, ல் யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்று ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இணைந்து இந்தியா இல்லது லெபனானில் பயிற்சி பெற்று நாட்டிற்கு வந்து செயல்பட்டு 1982, காலப்பகுதியில் பொத்துவில் மக்கள்வங்கி கொள்ளை இவர் தலைமையில் இடம்பெற்று பின்னர் கைதாகி வெலிக்கடை சிறையில் இருந்தவர்.
1983,யூலை வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை உட்பட 54, தமிழ் அரசியல் கைதிகள் கொலைசெய்யப்பட்டதில் அங்கு தப்பிய கைதிகளில் இவரும் ஒருவர்.
வெலிக்கடை சிறை கைதிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்ட பின்னர் இவரும் மட்டக்களப்பு சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மட்டக்களப்பு சிறை 1983 செப்டம்பர் 23ல் உடைத்து கைதிகள் தப்பிய சமயம் 150 கைதிகளும் தப்பியோடினர். இச்சிறையுடைப்பில் இராமலிங்கம் பரமதேவா, பனாகொடை மகேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா, எஸ். ஏ. டேவிட் போன்ற முக்கிய அரசியல் கைதிகளும், மற்றும் சில விடுதலைப் புலிகளின்ஆதரவாளர்களும் தப்பினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றனர்.
இயக்கத்தில் இருந்து வெளியேறி ஈபீடிபி இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் அதனை தேர்தல் திணைக்களத்தில் 1987, நவம்பரில் கட்சியின் சின்னமாக வீணையை கொண்டு பதிந்து விடுதலை இயக்கத்தில் இருந்து அரசியல் கட்சி தலைவரானார்.
அரசியல் கட்சி தலைவரானாலும் இலங்கை அரசில் இராணுவத்துடன் இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களில் ஒன்றாக இவருடைய கட்சி ஆயுதங்களுடன் செயல்பட்டது.
1987, தொடக்கம் 1990, வரை இந்தியாசென்று திரும்பி 1990 இல் தேவானந்தா இலங்கை திரும்பினார். இவருக்கும் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவிற்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.விடுதலைப் புலிகளிடம் இருந்து தமக்குப் பாதுகாப்பு தரும்படியும், பதிலாக ஈபிடிபி கட்சியை இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசும் இதனை ஏற்றுக் கொண்டது.
இதன் மூலம் ஈபிடிபி துணை இராணுவக் குழுவாக மாறியது.
இலங்கை, இந்தியாவில் உள்ள அனைத்து ஈபிடிபி உறுப்பினர்களும் கொழும்பில் கூடினர். இலங்கை அரசு அவர்களுக்குப் பெருமளவு நிதியுதவி வழங்கியது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியதை அடுத்து, அத்தீவுகளை ஈபிடிபி அரச இராணுவத்தின் உதவியுடன் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
அத்தீவுகளில் மக்களிடம் இருந்து வரி அறவிட ஆரம்பித்தது.கொழும்பில் வாழும் தமிழர்களிடம் இருந்தும் பணம் கப்பங்களாகப் பெறப்பட்டன.
ஈபிடிபி வன்முறைகளைக் கைவிட்டு விட்டதாக அறிவித்திருந்தாலும், அதன் துணை இராணுவக் குழு தொடர்ந்து இயங்கி வந்தது.அல்லைப்பிட்டி படுகொலைகளில் இலங்கைக் கடற்படைக்கு துணையாக செயற்பட்டதாக ஈபிடிபி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
1994, தேர்தலை விடுதலைப்புலிகள் பகிஷ்கரிக்குமாறு கட்டளை இட்டனர் அதனால் தமிழர் விடுதலை கூட்டணி, உட்பட வேறுகட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை அதனை சாதகமாக சந்திரிகா அரசு பயன்படுத்தி ஈபிடிபி 1994 நாடாளுமன்றத் தேர்தலில்சுயேட்சைக் குழுவாக யாழ்ப்பாண மாவட்டத்தில்போட்டியிட்டது.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோர் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால், ஈபிடிபி ஒன்பது நாடாளுமன்ற இடங்களை 10,744 வாக்குகளில் (0.14%) வென்றது. இவற்றில் 9,944 வாக்குகள் ஈபிடிபியின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுப் பகுதிகளில் வாக்களித்தவர் ஆவர். ஈபிடிபி அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மக்கள் கூட்டணியுடன்இணைந்து ஆட்சியமைத்தது.
1994,ஆகஷ்ட்,16 , தொடக்கம் 24 2024,செப்டம்பர்,24,வரை 30, வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் தமிழ்தேசிய அரசியல் விரோதியாகவும்,தமிழ் ஆயுத ஒட்டுக்குழு தலைவராகவும் பதவி வகித்தவர்.
ஜனாதிபதிகளான சந்திரிகா, மகிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் வரை 05, ஜனாதிபதிகளுடன் பணிபுரிந்துள்ளார்.
அமைச்சர்களாக..
வடக்கு, வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு, விவசாய சந்தைப்படுத்தல் மேம்பாடு, தமிழ், இந்து விவகாரங்கள், வடக்கிற்கான தமிழ் மொழிப் பாடசாலைகள், தொழிற்கல்வி அமைச்சர்
பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் மேம்பாட்டு அமைச்சர்
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சர்
2024, நவம்பர்,14, தேர்தலில் யாழ்பாவட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் 2025,மே,06 உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கில் சில ஆசனங்களை பெற்றதுடன் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சில சபைகளுடைய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் டக்லஷ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு உறவு கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று2025,டிசம்பர்,26, ல் கைதுப்பாக்கி விவகாரம் ஒன்றில் சம்மந்தப்பட்ட சந்தேக நபராக கொழும்பு குற்றப்புலனாய்வாளர்களால் கைதாகியுள்ளார்..
-பா.அரியநேத்திரன்