இயற்கை அனர்தம் காரணமாக மூன்று மில்லியன் முட்டைக்கோழிகள் பலி!

இலங்கையை பாதித்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கை முழுவதும் 3 மில்லியன் முட்டையிடும் கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும், முட்டைகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கோழி முட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும், எனவே இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இன்று வியாழக்கிழமை (04/12/2025) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதியது பழையவை