உணவுக்காக பயன்படுத்தப்பட்டும் பொருட்களை நிவாரணமாக வழங்கிய மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள்..!

நாட்டில் ஏற்ப்பட்ட பாரிய அனர்த்தத்தால் நாடே நிலைகுலைந்திருக்கும் நிலையில் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருக்கின்றனர் இம் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் மனிதநேயப் பணிகளில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என கருதிய  மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் தங்களது இரண்டு நாட்களுக்கான ஒருவேளை உணவினை தவிர்த்து தங்களது உணவுக்கிக பயன்படுத்தப்படும் பொருட்களை  நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழகியிருந்தனர்.

இவ் உணவுப் பொருட்களை  கையளிப்பதற்கான நிகழ்வு சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அவர்களுக்கு வழங்கப்பட்டு பின்
அதிகாரி அவர்களின் தலைமையிலும், பிரதான ஜெயிலர் அவர்களின் வளிகாட்டலிலும்,  அதன் பின்பு அவ் உலர் உணவு நிவாரண பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியின் அரசாங்க அதிபர்
அருள்ராஜ் அவர்களிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் அவர்களினால் நேரில் சென்று நேற்றைய தினம் (05.12.2025) கையளிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர்  R. M. E.ரத்நாயக்க அவர்களும் ஏனைய உத்தியோதர்களும் கலந்து சிறப்பித்தனர்.

புதியது பழையவை