திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் ஒருவர் உயிரிழப்பு.!

திருகோணமலையில் நேற்று (01.12.2025) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கி பிர​யோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய தொழிலதிபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணத்துக்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​படுகொலைச் சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இக்கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
புதியது பழையவை