ஜெர்மன் புலம்பெயர் உறவுகளால் போரதீவுப்பற்றில் நிவாரண உதவிகள்.!

வடகிழக்கு புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஜேர்மன் தாயக உறவுகள் அமைப்பின் பணிப்புரைக்கு அமைவாக போரதீவு பற்று பிரதேச சபை கோவில் போரதீவு வட்டார உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த வாரம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான  போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேத்துச்சேனை மற்றும் நாதனை வெளி கிராமத்திற்கு நிவாரணம் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் வடகிழக்கு தாயக உறவுகளால்  நேற்று (02.12.2025) ஆம் திகதி  கிராம சேவையாளர் மற்றும் குறித்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரவுக்கு அமைவாக  சுமார் 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

கிடைக்கப்பெற்ற மேற்படி உதவிகளை  போரதீவுப்பற்று பிரதேசசபை வெல்லாவெளி வட்டார உறுப்பினர் வரதராஜா, கிராம உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,  இணைந்து வழங்கி வைத்தனர்.

ஓவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தங்களின் போதும் வேத்துச்சேனை உட்பட அதனை அண்டிய கிராமங்களும் கடுமையான வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு வரும் பிரதேசமாக வருவதுடன், பலர் இடம்பெயர்ந்தும் வருகின்றனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வேத்துச்சேனை கிராம குடும்பங்களுக்குமாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மேற்படி கைங்கர்யம் மிக்க சேவையை மனமுவந்து வழங்கி வைத்த ஜேர்மன் நாட்டில் வசிக்கும் வடகிழக்கு தாயக  உறவுகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் குறித்த கிராமத்தின் கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம பொதுமக்கள் சார்பில்  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

புதியது பழையவை