Drone களை வான்வெளியில் பறக்க விடுவது விமானப்படையினரின் மீட்பு நடவடிக்கைகளுக்கு அச்சறுத்தலாகவுள்ளதாகவும் இடையூறு விளைவிப்பதாக உள்ளதாக விமானப்படை எச்சரித்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை இயக்க வேண்டாமென விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
மனிதாபிமான, அனர்த்த நிவாரணப்பணிகளின் போது கட்டுப்பாடற்ற ட்றோன்களைப்பறக்க விடும் போது விமானப்படையினருக்கும் பிற மீட்பு நிறுவனங்களின் வான் நடவடிக்கைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் வான்வெளியில் பறக்க விடும் போது விமானப்பாதைகளில் பயணிப்பதனால் மீட்பு நடவடிக்கைக்கும் நிவாரணப்பணிகளை சீர்குலைப்பதுடன், துயரமான விமான விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
இத்தகைய சம்பவங்கள் விமானக்குழுவினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், பெறுமதிமிக்க விமான சொத்துக்களுக்கு ஆபத்தை விளைவித்து தரையிலுள்ள மக்களுக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
நடைபெறும் அனைத்து விமான மீட்பு நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்றிறனை உறுதி செய்வதற்காக, விமானப்படை இவ்வேண்டுகோளை விடுக்கின்றது.
நிவாரணப்பணிகளில் விமானப்படை விமானங்கள் அல்லது பிற பதில் விமானங்கள் ஈடுபட்டுள்ள பகுதிகளில் ட்ரோன்களை இயக்குவதைத் தவிர்ந்து கொள்வதுடன், எந்தவொரு ட்ரோன் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அனைத்து ட்ரோன் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களைப்பற்றி விமானப்படைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்முக்கியமான காலகட்டத்தில் உயிர்களைப் பாதுகாக்கவும் தடையற்ற விமான மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்யவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.