திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (14.01.2026) உத்தரவிட்டுள்ளது.