தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு மக்கள் வருகைதந்து தைத்திருநாளுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது.
பொங்கலுக்குரிய பொருட்கொள்வனவிலும் புத்தாடைக் கொள்வனவிலும் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருவதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகையினையொட்டி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.