பொதுமக்களுக்கு சேவை வழங்குவதன் வினைத்திறனினை உறுதிப்படுத்தும் ஒருமைப்பாடுடனான அரச சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டியதனை நோக்காக கொண்டு 2026ம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று முன்(01.01.2026) ஆம் திகதி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதேச செயலாளர் அவர்களினால் தற்போதைய குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் கடந்த வருடத்தின் அடைவுகள் தொடர்பாகவும் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கணக்காளர், சமூர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், முகாமைத்துவப் பணிப்பாளர் உட்பட அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.