அக்கரைப்பற்று மின்சார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் 2026 ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மின் அத்தியட்சகர் நூருல்ஹக் அவர்களின் தலைமையில் (01.01.2026) ஆம் திகதி காலை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மின் அத்தியட்சகரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு 2 நிமிட இறை வணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொண்டதுடன் மின் அத்தியட்சகரினால் விசேட உரை நடாத்தப்பட்டு அன்றய அலுவலக நடவடிக்கைகள் சிறப்பாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.