சட்டோவிரோத மதுபானம் அருந்திய 5 பேர் உயிரிழப்பு.!

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதியது பழையவை