மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேசசபையில் புதிய ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில்  அலுவலகத்தில் நேற்று முன் (01.01.2026)ஆம் திகதி  2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் நேற்றைய தினம் (01.01.2026)ஆம் திகதி பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதன் அவர்களினால்  தேசிய கொடி ஏற்றப்பட்டு புதிய வருட கடமைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

இதன்போது நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுநிருவாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் (2025.12.30) ஆம் திகதிய 34/2025ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக  பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். 

குறித்த நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் ,வி.மதிமேனன்,உப தவிசாளர் த.கயசீலன்,பிரதேசசபை உறுப்பினர்கள், செயலாளர் எஸ்.பகீரதன்,அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட நூலகங்களின் ஊழியர்களும் கலந்து கொண்டனர். 

நாட்டின் தேசிய கொடி செயலாளரினால் ஏற்றப்பட்டு தொடர்ந்து தவிசாளரினால் பிரதேசசபை கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அமைதி பேணப்பட்டதுடன்  இவ் ஆண்டிகான அரச சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டதுடன் தவிசாளரின் விசேட உரையும் மற்றும் உப தவிசாளரின் உரையும்,உறுப்பினர் சு.விக்கினேஸ்பரன் அவர்களின் உரையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை