அவுஸ்திரேலிய இளம் பெண் ஊடகவியலாளருக்கு இலங்கையில் நடந்த சம்பவம்.!

உனவட்டுன கடற்கரை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து பையை திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளம் பெண் ஊடகவியலாளரான இவர் தனியாக இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.


இந்நிலையில், இவரிடமிருந்து ஐபோன் ஒன்று, வெளிநாட்டு பணம் மற்றும் வங்கி அட்டைகள் அடங்கிய பை திருடப்பட்டது.

உடனடியாக உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (04.01.2026) ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று   (05.01.2026)காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை