அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட #ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் இன்று (04.01.2025) மதியம் ஒருவரை முதலை தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக உடனடியாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சி. றியாஸ் தலைமையிலான குழு களத்தில் செயற்பட்டு வருகின்றது.
மேலும் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
மக்கள் பாதுகாப்பு காரணமாக, நீர்நிலைகளுக்கு அருகே செல்லும் போது அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.