அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதி கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரை பிரதேசத்தில் கடல் அரிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கல்முனை கொடியேற்றப் பள்ளிவாயல் பிரதேசத்தில் கடல் அரிப்பு வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் கொடியேற்றப் பள்ளிவாயல் பிரதேசம் அபாயகரமான நிலைமையை எதிர்நோக்கி உள்ளது.
கடந்த காலங்களில் கொடியேற்றப் பள்ளிவாயலை அண்டிய பிரதேசங்களை அழகுபடுத்தும் நோக்கில் செய்த அனைத்து வேலைத்திட்டங்களும் நாசமான நிலையில் காணப்படுகிறன.
இந்த நாசமான நிலைக்கு கடல் மாத்திரம் காரணம் அல்ல இந்த வேலைத்திட்டங்களை செய்து கொடுத்த ஒப்பந்ததாரர்களும் காரணம் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.