கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்து குடைசாய்ந்து விபத்து.! சாரதி உயிரிழப்பு.!

இன்று (18.01.2026) ஆம் திகதி 6.30 மணியளவில் கொழும்பில் இருந்து வெளிமடைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவு எடுக்க முற்பட்ட போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். 

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு பதுளை வீதியில் களுபஹன பாடசாலைக்கு அருகாமைௌஎயிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில்  ஆலடித்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை 
பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த சாரதியின் சடலம் தற்போது ஆலடித்தன்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை