மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கில் பட்டிப் பொங்கல்.!

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு மீராண்டவில்  கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு  புலிபாய்ந்தகல்  கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடத்தும் பட்டி பொங்கல் விழாவானது நேற்று(17.01.2026) இடம் பெற்றன.

நேற்று  புலிபாய்ந்தகல்  வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் விழாவில்  வரவேற்பு நடனம் மற்றும் சிறந்த பண்ணையாளர்கள் கௌரவிப்பு அதிதிகள் உரை என்பன இடம்பெற்று.  

கோறளைப்பற்று தெற்கு கால்நடை  பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்  கே.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் சுல்பிகான் ஆவுபக்கர் , மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையளர் தெ.ஜெகநாத்,  விவசாயம்  கால்நடை காணி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன் மற்றும் மாகவலி B. பிராந்திய திட்ட பணிப்பாளர் P.G நேயல் ஜெயசிறி, மகவலி  Bதிட்ட உதவி பணிப்பாளர் ரி. சசிவதனி மற்றும் கமநல சேவை உத்தியோகஸ்தர்கள்,  கால்நடை அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , கிராம உத்தியோகஸ்தர்,  பால் பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை