இந்திய அரசு மற்றும் இந்திய மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பொங்கலுக்குரிய பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கிவைப்பு.!

தைத் திருநாளை முன்னிட்டு இந்திய அரசினால் பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள்  வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று(13.01.2026) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு யாழ்ப்பாணம்- இந்தியத்  துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து பொங்கலுக்குரிய பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்கிவைத்தனர்.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை