மட்டக்களப்பு புகையிரத பிரதான வீதியில், வீதி சமிஞ்சை விளக்கு வீதிக்கு அருகிலுள்ள பகுதியில் இன்று (24.01.2026)ஆம் திகதி காலை லொறி ஒன்று பல வாகனங்களை மோதி தள்ளியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பின்னர், குறித்த லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் மற்றொரு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகையில், தப்பிச் சென்ற சாரதி ஏறாவூரைச் சேர்ந்தவர் எனவும், அவர் மது போதையில் லொறியை செலுத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.