ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களை நினைவு கூரும் வணக்க நிகழ்வு இன்று இடம் பெறுகின்றன.
கடந்த (20/01/2026)ஆம் திகதி அமரிக்காவில் இயற்கை எய்திய
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களின் நினைவு வணக்கம் இன்று (24/01/2026) பி.ப: 01, மணிக்கு மட்டக்களப்பு அமரிக்க மெஷன் மண்டபத்தில் இடம்பெறும் .
தமிழ்தேசிய பற்றுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யார் இவர் ..?
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க் நகரில் வசித்து வந்தவருமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராவார்.
1970 ஆம் ஆண்டில் போராட்ட வரலாற்றை இவரைத் தவிர்த்து எழுதிவிட முடியாது ஆரம்பகால முன்னணிப் போராளியாகத் திகழ்ந்தவர். குறிப்பாகத் தமிழ் மாணவர் பேரவை, தமிழ் ஈழவிடுதலை இயக்கம் போன்றவற்றில் ஆரம்பகால உறுப்பினராக விளங்கியவர்.
1985 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயோர்க் சர்வதேச மன்னிப்புச் சபையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
-பா.அரியநேத்திரன்
24/01/2026