காலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் குறித்த மருத்துவமனையில் வைத்து தனது அந்தரங்க உறுப்பு ஸ்கேன் செய்யப்பட்டதாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த பெண் தனது மார்பெலும்பு பகுதியில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற காலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இரத்தப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்
இதன்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் பரிந்துரைத்துள்ளார்.
தனது அனுமதியின்றி தனது அந்தரங்க உறுப்புகள் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக எந்தவித அறிக்கையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.