மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சித்தாண்டியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சித்தாண்டி 01 கிராமத்தில் உள்ள 65 குடும்பங்களை சேர்ந்த 29 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன்வழங்கி வைத்தார்.
லண்டன் குளோபல் வின் செரட்டி அமைப்பின் உதவியில் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சித்தாண்டி 01 கிராம மக்களால் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் சந்திவெளி இணைப்பாளர் வினோ அவர்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மேற்படி உதவிகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.
செங்கலடி சித்தாண்டி 01 விநாயகர் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் நோக்குடன் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனிடம் தங்களது கிராமத்தின் குறைகள், குடிநீர் பிரச்சினை, வீடு இல்லாப் பிரச்சினை, வாழ்வாதார பிரச்சினைகள், சிறுவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனின் கவனத்திற்கு அண்மையில் கொண்டு வந்திருந்தனர்.
இதன் பின்னர் மேற்படி கிராமத்தில் உள்ள 65 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்களை பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் அண்மையில் வழங்கி வைத்திருந்த நிலையில் மேற்படி குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து குறித்த கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினை,வாழ்வாதார பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.
மேற்படி உதவிகளை வழங்கிய பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் மற்றும் வினோ அவர்களுக்கு சித்தாண்டி 01 விநாயகர் கிராமத்தில் உள்ள மக்கள் தாங்களது நன்றிகளை தெரிவித்தனர்.