மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஸ்கேன் பிரிவில் நீண்டகாலமாக நிலவி வந்த தளபாட வசதிகள் மற்றும் கணினி உபகரணங்களின் தேவையைப்பூர்த்தி செய்யும் வகையில், தளபாடங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (27.01.2026) இடம்பெற்றது.
பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் நிதிப்பங்களிப்பில், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு குழுமத்தின் வேண்டுகோளின் பேரில், ரூபாய் 4 இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் இஸ்தாபகர் சோழையூரான் (ஜோதி) ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி மைதிலி பாத்லற், விஷேட வைத்திய நிபுணர்களான நிமோஜன் இராஜேந்திரா, உள்ளிட்ட சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.