துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு.!

அம்பலாங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றும், துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று( 27.01.2026) இரவு, அம்பலங்கொடை சுனாமிவத்த பகுதியில் ஒரு வீட்டு விருந்துக்கு வந்திருந்த ஒருவர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுடப்பட்டு, பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் கலபொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, துப்பாக்கிச் சூட்டுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை