முதலாம் தரத்திற்கான மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும், மொடியூல்களை (Modules) தயாரிப்பதில் நிலவும் பிரச்சினைகள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டு, 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13.01.2026) பிற்பகல் நடைபெற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதியும் பங்கேற்றுள்ளார்.
அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இன்று (13) தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கல்வி மறுசீரமைப்பு செயல்முறை ஒன்றின் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்பட்டுள்ளது.