வேலையில்லாத ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தொழிலைத் தாருங்கள்.!

இலங்கை பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற, வேலையில்லாத ஆயுர்வேத வைத்தியர் சங்கம் மற்றும் அரச வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் சித்த வைத்தியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்குமிடையிலான சந்திப்பு (12.01.2026) அலரி மாளிகையில்
இடம்பெற்றது.

இதில் சித்த, யுனானி மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, அரச வேலைவாய்ப்பு இல்லாமல் பல வருடங்களாக தொழிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வைத்தியர்களுக்கான வேலையை வழங்கும் நடவடிக்கையினை எடுக்குமாறு சந்திப்பின்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வலியுறுத்தப்பட்டது.
புதியது பழையவை