அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

அமெரிக்காவின் மேற்கு மாநிலமான ஓரிகான் கடற்கரையில் வலுவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று(16.01.2026)ஆம் திகதி  6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 4.4 மைல்கள் (7.1 கிலோமீட்டர்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன், அதன் மையப்பகுதி பாண்டன் நகருக்கு மேற்கே 186 மைல்கள் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், நிலச் சேதமும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை