இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களின் நினைவுச் சிலை மாவிட்டபுரம் உள்ள அவரது இல்லத்தில் இன்று(31.01.2026)ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வு, மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில், செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும்.
நினைவேந்தல் பேருரைகளைத் தொடர்ந்து, மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவுமலர் மற்றும் பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் எழுதிய “ஈழ அண்ணல் சோ.மாவை சேனாதிராஜா” ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.