கோட்டைக் கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் கடமையேற்பும் வரவேற்றல் நிகழ்வும்..!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக் கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டு கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி வேழவேந்தன் சிறிப்பிரியா அவர்களை வரவேற்கும் நிகழ்வு  இன்று(04.01.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 10 மணிக்கு பிரதி அதிபர் எஸ்.அரசரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி நிதிகள்,பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் பிரதிநிதிகள்,பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள்,கமரா போன்றவற்றை அன்பளிப்பு செய்த நன்கொடையாளர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை