மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளியில் நேற்று (23.01.2026)ஆம் திகதி கிழக்கு மாகாணப் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதம செயலாளர், பிரதிச் செயலாளர் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ,உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள்,மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
பாரம்பரிய முறைப்படி தமிழர்களின் கலாசார விழுமியங்களுக்கு ஏற்ப, வயலில் நெல் அறுவடை செய்யப்பட்டு, கிராமிய முறைப்படி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பொங்கல் விழா சிறப்பிக்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
கலைத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் நிகழ்வில் பங்களித்தவர்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.