பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் காலமான செய்தியினை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இறக்கும்போது அவரது வயது 81வயதாகும்.
இவர் கொழும்பு டைம்ஸ் (The Sunday Times) பத்திரிகையின் பாதுகாப்புத்துறை ஆசிரியராகப் பணியாற்றியதுடன், CNN, Times of England மற்றும் ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி (Jane's Defence Weekly) போன்ற சர்வதேச ஊடகங்களின் இலங்கைக்கான செய்தியாளராகவும் பல தசாப்தங்களாகச் செயற்பட்டார்.
விருதுகள்: ஊடகத்துறையில் இவரின் துணிச்சலான பணிக்காக சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். குறிப்பாக, நெருக்கடியான உள்நாட்டுப் போர் காலப்பகுதியில் இவர் எழுதிய பாதுகாப்புத்துறை ஆய்வுகள் மிகவும் கூர்மையானவை.
இறுதி அஞ்சலி: அன்னாரின் பூதவுடல் இன்று காலை 9 மணி முதல் இல. 11 C /1, சிறிவர்தன வீதி, ஹில் ஸ்ட்ரீட், தேஹிவளை (Dehiwala) என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இலங்கை ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக இவரது மறைவு கருதப்படுகிறது.