வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலங்கரச்சை, தியாவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சந்திரமோகன் கஜன் என்ற இளைஞன் மின்சார தாக்கி ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நேற்றிரவு (13.01.2026)ஆம் திகதி 9 மணியளவில் எம்.பி.சீ.எஸ் வீதி, செம்மண்ணோடையில் அமைந்துள்ள வெல்கம் பூட் சிட்டி கட்டடத்தில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை, மின்சாரம் தாக்கிய நிலையில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீசியெறியப்பட்டுள்ளார்.
கீழே வீசியெறியப்பட்ட இளைஞன் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.