மட்டக்களப்பில் வெள்ள நீரில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - மயிரிழையில் உயிர் தப்பிய விவசாயிகள்.!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பெண்டுகள்சேனை பாலத்தில் நேற்று(19.02.2026)நெல் மூடைகளை ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று அதிகரித்த நீர்மட்டத்தினால் குடைசாய்ந்துள்ளது.

இதன் போது நீரில் அடித்து செல்லப்பட்ட விவசாயிகள் சக விவசாயிகளினால் காப்பற்றப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதுடன் வேளாண்மை அறுவடை டைபெறுவதனால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் வெள்ள அனர்த்தம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியமாகும்.
புதியது பழையவை