மட்டக்களப்பில் சுவீடனில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள் -அதிர்ச்சியில் அதிரடிப்படை..!

மட்டக்களப்பு, குடும்பிமலை பிரதேசத்தில் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர்களை நேற்று (06.02.2026) மாலை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து குடும்பிமலை பகுதியில் நேற்று மாலை அரந்தலாவை விசேட அதிரடிப்படையினர் , இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் நிலத்தை தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை