முன்னாள் மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அமரர் செல்லையா இராசதுரை இன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களுக்கு 1976, ம் ஆண்டு கூறிய உண்மை..!
1976, ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு இலங்கைத்தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை 49, வயதில் திருகோணமலை மாவட்டத்தில் கட்சி கருத்தரங்குகளில் செல்லும்போது திரியாய் கிராமத்து மூலக்கிளையில் கருத்தரங்கில் பங்கேற்றார் அப்போது திரியாய் மூலக்கிளை தமிழரசுக்கட்சி தலைவராக தற்போதைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் 23, வயது இளைஞனாக பதவியில் இருந்தார்.
அவருடன் நட்பு ரீதியாக உரையாடிய செல்லையா இராசதுரை ஒரு உண்மையுயும் ஆலோசனையையும் குகதாசன் அவர்களிடம் கூறினார். அது யாதெனில்.. “ நீங்கள் மூலக்கிளை தலைவராக ஒரு இளைஞனாக இருப்பதை நான் பாராட்டுகிறேன் கட்சியில் தலைமை பதவிக்கும் உங்களை போன்றவர்கள் வரவேண்டும் அப்படி வரவேண்டுமானால் அதற்கு பட்டப்படிப்பு வேண்டும் கோட் ரை போடவேண்டும் இல்லை என்ரால் தலைவர் பதவி தரமாட்டார்கள் ஓரம் கட்டுவார்கள். எனக்கு தலைவர் பதவி தராமல் தடுத்தமைக்கு இதுதான் காரணம், எனவே நீர் நன்றாக படித்து பட்டம் பெற்று கட்சி தலைமைக்கு வரவேண்டும் என கூறினார்.
1973, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிக்கு தலைவர் பதவிக்காக செல்லையா இராசதுரைக்கு வழங்காமல் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தெரிவு செய்தமைக்கு இதுதான் காரணம் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் திருகோணமலை குகதாசனிடம் ஆலோசனையாக 1976, ல் கூறினார் இந்த உண்மையை இப்போதும் உயிருடன் உள்ள திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டு அறியலாம்.
இந்த விடயத்தை தற்போதைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் ஐயா ஒருதடவை என்னிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பா.அரியநேத்திரன்.