மட்டக்களப்பில் இந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற இசை நிகழ்வு.!

மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி நேற்று(17.02.2026)ஆம் திகதி இரவு  மட்டக்களப்பு கல்லடியில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது.

இலங்கை பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான இணைப்பாளர் சகோதரர் வீ.கே.சுரேந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தென்னிந்திய பிரபல பாடகர் பீ. உன்னிகிருஷ்ணன் அவர்களும் அவரது மகள் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் மற்றும் பாடகரும் நடிகருமாகிய பிலக் பாண்டியும் பங்கேற்று குறித்த பக்தி இசை நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.
புதியது பழையவை