மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சை நீர் உள்ளெடுப்பகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு பம்ப் இயந்திரம் திடீரென இன்று(02.02.2026)ஆம் திகதி செயலிழந்துள்ளதன் காரணமாக, மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு, இருதயபுரம், கல்லடி, ஏறாவூர், காத்தான்குடி, செங்கலடி, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, வவுணதீவு போன்ற நீர் வழங்கல் திட்ட பகுதிகளில் நீர் அளவில் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்படும்.
எனவே, இதனை கருத்தில் கொண்டு, நீர் பாவனையாளர்கள் தேவையான அளவு நீரை, நீர் விநியோகிக்கப்படும் போது சேமித்து, வீண் விரயத்தைத் தவிர்த்து, சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.