மட்டக்களப்பு திருப்பழுகாமம் சிவன் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற சிவராத்திரி விழா மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகள்.!

​மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் தேவஸ்தானத்தில்(சிவன் ஆலயம்) மஹா சிவராத்திரி விழா நேற்று (15.02.2026)ஆம் திகதி இரவு  மிகவும் பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது.

​சிறப்புப் பூசைகள்..
சிவராத்திரியினை முன்னிட்டு, ஆலயத்தில் இரவு முழுவதும் நான்கு சாமப் பூசைகள் நடைபெற்றன. இதன்போது விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன், லிங்கோற்பவ மூர்த்திக்கு 1008 சிவநாம வில்வ அர்ச்சனைகள் செய்யப்பட்டு விஷேட வழிபாடுகள் நடத்தப்பட்டன.

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்தனர்.
சிவராத்திரி விழாவினைச் சிறப்பிக்கும் வகையில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் திருப்பழுகாமம் ஸ்ரீ சிவன் ஆலயம் ஆகியவை இணைந்து நடாத்திய அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இவ் நிகழ்வானது திருப்பழுகாமம் ஸ்ரீ சிவன் ஆலயம் தலைவர் தலமையில் இடம் பெற்றன.

நிகழ்வின் போது அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தின் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சூரியகுமாரன் கலந்து கொண்டனர்.

​இக்கலை நிகழ்வுகள் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. நிகழ்வின் இறுதியில், போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பரிசில்களும் வழங்கி அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை