இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 


காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் வடமேற்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கியும் நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில்  மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை