இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான 'அறிவகத்தில்' நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது, வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும், இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர்கள் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.