யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக தமிழர் கடமையேற்றார்.!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சனம் இன்று (23.02.2026) ஆம் திகதி தனது பதவியை உத்தியோகபூர்வமாக கடமையுற்றுள்ளார்.

கடமைகளை ஏற்பதற்கு முன்புப் சிவானந்தன் நிதர்சனம் ஆரம்பத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனத்தால் மக்கள் மகிழ்ச்சி
அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றார். தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களல வழங்கி அவரை கௌரவித்தனர்.  

அதேவேளை தமிழர் பகுதிகளில் தமிழ் தெரியாத சிங்கள மொழி பேசும் பொறுப்பதிகாரிகளை நியமிப்பதால் மக்கள் தமது பிரச்சினைகளை தெளிவாக கூற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

சுன்னாகம் பொலிஸ் நிலயத்திற்கு தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்ய முடியும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை