உண்ணாவிரதப் போராட்ட இடத்தில் ரவூப் ஹக்கீம்!

கொழும்பு ,கோட்டை  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, ஆசிரியர் அபிவிருத்தி அதிகாரிகளின்   தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  நேரில் சென்று, அவர்களின் பிரச்சினைகள்  குறித்து கலந்தாலோசித்தார்.

இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்து ஏமாற்றப்பபட்டதன் காரணமாகவே இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம்  பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகியோரும்  உடனிருந்தனர்.
புதியது பழையவை