நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (03.02.2026) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 37 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 429 ரூபாய் 29 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 75 சதம், விற்பனை பெறுமதி 371 ரூபாய் 45 சதம்.