இலங்கையில் இன்று தங்கதின் விலை..!

 உலகில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் இன்று (09.02.2026) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 395,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபாவிற்கு, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 7ஆம் திகதி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதுடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை