இலங்கை போக்குவரத்து சபை சாரதி கைது!

இலங்கை போக்குவரத்து சபையின்  சாரதிமொருவர் போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று  (14.02.2026)ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிகளை ஏற்ற  வந்த பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும்  திருகோணமலை மாவட்ட போக்குவரத்து  பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் போக்குவரத்து சபையில் கடமையாற்றி வரும் வவுனியா -ஈரப்பெரிய குளம்,வெஹரகம பகுதியில் வசித்து வரும் 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பஸ்ஸின் சாரதி  போதைப் பொருள் பாவித்து பஸ்ஸை செலுத்தி  வருவதாக திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்கு பயணியொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக திருகோணமலை பஸ் தரிப்பிடத்தில் சாரதியை பரிசோதனை செய்தபோது போதை பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து குறித்த சாரதியை கைது செய்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை