அக்கரைப்பற்று - கல்முனை வீதியில் டிப்பர் வாகனம் விபத்து.!

அம்பாறை அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் டிப்பர் வாகனம் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச் சம்பவம் இன்று (06.02.2026)ஆம் திகதி  ஒலுவில் பிரதான வீதியில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது டிப்பர் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை