காத்தான்குடி மீடியா போரத்தின் சுதந்திர தின நிகழ்வு.!

இலங்கை சனநாயக  சோசலிசக் குடியரசின் 
78ஆவது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு  காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை (04.02.2026) காலை அல் பஜ்ர் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போரத்தின் ஆயுட்கால தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தேசிய கொடியை ஏற்றியதுடன் போரத்தின் உறுப்பினர் அஷ்ஷேய்க் நெளபல் (பலாஹி) து ஆ பிரார்த்தனை வழங்கினார்.

இன, மொழி, மத வேறுபாடுகளைத் தாண்டி
ஒற்றுமை, அமைதி, நேர்மை, உழைப்பு என்ற
அடித்தளங்களில் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் எனும் தொனியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் போரத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை