இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மூன்று பேர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை (24.02.2026)ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தனர்.
அதன்படி....
01- கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra,
02- கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari,
நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.