தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர், தந்தை செல்வாவின் 128வது ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் (31.03.2026) அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், கட்சியின் மட்டக்களப்பு கிளைத் தலைவரும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும்
தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் நடராசா சுதர்சன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் நடராசா புஸ்பராசா மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தியதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை