ஈழத்துத் திருப்பதிகளுள் முதன்மையானதும், தக்ஷிண கைலாயம் என அழைக்கப்படுவதுமான திருகோணமலை அருள்மிகு திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா (மஹோற்சவம்) நாளை 01/04/2026 புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
நாளை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இந்த மஹோற்சவம், தொடர்ந்து 20 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.
முக்கிய திருவிழாக்கள் பின்வருமாறு இடம்பெறவுள்ளன:-
இரதோற்சவம் (தேர்) 17/04/2026 (வெள்ளிக்கிழமை) காலை 8.00 மணிக்கு
தீர்த்தோற்சவம்:- 18/04/2026 (சனிக்கிழமை) காலை 7.00 மணிக்கு
பூங்காவனம்:-19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு
தெப்பத் திருவிழா:-
20/04/2026 (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கி
விசேட பூசைகள்:-
மஹோற்சவ காலங்களில் தினமும் காலை 8.00 மணிக்கும், மாலை 3.30 மணிக்கும் விசேட அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்று எம்பெருமான் அடியவர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்.